வணக்கம் கருவேலங்கடை
முயன்றால் ஆமையும் வெல்லும்
7 மே, 2010
14 அக்., 2009
28 ஜன., 2009
அருட்தந்தை
அவர்களைப் பற்றி........
திருமூலர், திருவள்ளளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமாள் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வருபவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் 1911-ஆம் ஆண்டு எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே அவருக்குக் கடவுள் யார்? உயிர் என்றால் என்ன? வறுமை எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. பல ஆண்டுகள் மேற்கொண்ட அயரா ஆராய்ச்சியின் வாயிலாக இக்கேள்விகளுக்கான விடையைத் தானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தி வருகிறார்.
சுய முயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறிய அவர் தியான முறைகளில் சிறந்ததான எளிய முறைக் குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, தளராத தற்சோதனை, உயிர்ச்சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் சித்தர்கள் கண்ட நெறியான காயகற்ப யோகம் - இவை இணைந்த வாழ்க்கை நெறியைப் போதித்து, மனிதகுலம் உய்ய அருட் தொண்டாற்றி வருகிறார்.
மேலும் காந்தத் தத்துவத்தின் மூலம் தெய்வநிலை, உயிர்நிலை, அறிவுநிலை இவற்றைப் பொது அறிவு படைத்த சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி வருகிறார். மனிதகுல நலனுக்குக் தேவையான கருத்துகளை எளிய நடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலநூல்களை எழுதி விளக்கி வரும் மகரிஷி அவர்கள் சுமார் ஆயிரத்து ஐந்தூறுக்கும் அதிகமான கவிகளையும் இயற்றியுள்ளார்.
மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவியிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இல்லறத்தில் இருந்தவாறே துறவற மனப்பான்மையை மேற்கொண்ட மகரஷி அவர்கள் தமது 81 வயதிலும் உலக சமாதானத்திற்காக அயராத சேவை புரிந்து வருகிறார். பல வருடங்களாக வௌருநாடுகளுக்கும் சென்று ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.
தத்துவத்திலே அவ்தைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களுக்கும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 'பாமர மக்களின் தத்துவ ஞானி' (Common Man's Philosopher) என்று போற்றப்படுகிறார்.
மகரிஷி அவர்கள் வெளிருயிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ விஞ்ஞானத்திற்தோ புறம்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது26 ஜன., 2009
மௌனம்
23 ஜன., 2009
காமராஜர்

வாழ்க்கை வரலாறு
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
நிறம்

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black
And when I die, I still black
And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green
And when you die, you grey
And you calling me colored?
இது மின்னஞ்சலில் வந்த கவிதை அனுப்பியவர்க்கு நன்றி .

சினிமா உலகில்... குறிப்பாக ஹாலிவுட்டில் மிக உயரியதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு, 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்துக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 பிரிவுகளின் கீழ் 3 பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.
அண்மையில் இப்படத்துக்காக கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்று சாதனை படைத்த ரஹ்மான், சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல்கள் (2) ஆகியவற்றுக்கு 81-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 7 விருதுகளுக்கான பிரிவுகளிலும் ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனருக்கான 10 பரிந்துரைகள்...
1. சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - ஏ.ஆர்.ரஹ்மான்.
2. சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரோடக் ஷன் - தயாரிப்பாளர் - கிறிஸ்டியன் கோல்சன்
3. சிறந்த இயக்குனர் - டானி போய்ல்
4. சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட் மென்டில்
5. சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
6. சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
7. சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
8. சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்
9. சிறந்த பாடல் - "ஜெய் ஹோ..." இசை - ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் : குல்ஸார்
10. சிறந்த பாடல் - "ஓ சாயா" இசை - ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் : மாயா அருள்பிரகாசம்
ஜொலிக்கும் மற்றொரு கலைஞர்!
ரஹ்மானைத் தவிர மற்றொரு இந்தியக் கலைஞரும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப்
பட்டியலில் இடம்பெற்று கவனத்துக்குரியவர் ஆகியுள்ளார்.
அவரே... ரேசுல் பூகுட்டி!
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ரிச்சர்ட் பிரைகேவுடன் இணைந்து சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார், பூகுட்டி!
ஆஸ்கருக்கு இணையாக போற்றப்படும் கோல்டன் குளோபன் விருதை, ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக இசையமைப்பாளர் ரஹ்மானும், சிறந்த இயக்குனர் விருதை டானி பாய்லுக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருதை சைமன் பியுஃபோயும் பெற்றனர். சிறந்த பிக்சர் டிராமாவுக்கான கோல்டன் குளோப் விருதையும் இப்படம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கரைப் பொறுத்தவரை, ஒரே படம் 10-க்கும் மேலான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட பிறகும், எதிர்பார்த்த வகையில் அதிக அளவிலான விருதுகளைப் பெறாத வரலாறு உண்டு.
ஆனால், ஸ்லம்டாக் மில்லியனரைப் பொறுத்தமட்டில், கண்டிப்பாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆஸ்கர் விருதுகளைக் குவிக்கும் என்பது சினிமா விமர்சகர்கள் கணிப்பு.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதைப் பெற்று தனது தாயகம் பெருமிதம் கொள்ளச் செய்வார் என்று நம்புவோம்!
ஆஸ்கர் விருதுகள் அடுத்தமாதம் 22-ம் தேதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது!
17 ஜன., 2009
உலகின் சிறந்த கிரிக்கெட் அணி இந்தியா







இலங்கை பிரச்சினை
அனைத்துக் கட்சிக் கூட்டம். ஒருமித்த தீர்மானம். ராஜினாமா. மனிதச் சங்கிலி. கூட்டங்கள். பேச்சுகள். கைதுகள். ராஜபக்ஸே - பிரணாப் முகர்ஜி கூட்டறிக்கை. கருணாநிதி மகிழ்ச்சி. சுபம்.உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்து இங்கே எதையும் சாதிக்கமுடியாது.***வைகோ, கண்ணப்பன் கைது. இருவரையும் கைது செய்தது எனக்கு ஏற்புடையதல்ல. இவர்களைக் கைது செய்திருக்கவே கூடாது.ஆனால் இருவரும் செய்தது முட்டாள்தனம். பொதுவாழ்வுக்கு வரும் எவரும், என்ன பேசுகிறோம் என்பதைக் கவனமாகப் பேசவேண்டும். அதுவும் எதிரி ஆட்சியில் இருக்கிறார், ஜனநாயக நடைமுறைகள் குறைவு என்றால், மேலும் கவனமாக இருக்கவேண்டும்.பிரிவினைவாதம் பேசுபவர்களையும்கூடக் கைது செய்யக்கூடாது என்பது என் வாதம். ஆனால் கருணாநிதி எவ்வளவு அவசரமாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, வைகோவைப் பழிவாங்க எவ்வளவு ஆர்வமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது.இம்முறை, வைகோ, கண்ணப்பனுக்கு பலத்த நேரடி ஆதரவுக்குரல் ஏதும் தென்படவில்லை. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வீரமணி, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் என்ன சொல்கிறார்கள்? ஜெயலலிதா சுண்டுவிரலைக்கூட அசைக்கமாட்டார்.***ராஜீவ் காந்தி சிலையைச் சேதம் செய்யும் தமிழ்த் தேசிய வெறியர்கள், முழு முட்டாள்கள். அடிப்படை அறிவு சிறிதும் அற்றவர்கள். இதனால் காங்கிரஸ் கட்சியை மேலும் அந்நியப்படுத்துவார்கள். விடுதலைப் புலிகள் “அன்னை சோனியா”விடம், தங்கள் குழுவின்மீதான தடையை விலக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஒரு செய்தியைப் படித்தேன். பிரபாகரன், தமிழக முதல்வர் கருணாநிதி எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் என்ற ஒரு செய்தி, சன் நியூஸில் கீழே ஓடியது.விடுதலைப் புலிகளுக்கே, தமிழ்த் தேசிய முரடர்கள் செய்வது கிலியைக் கொடுத்திருக்கும். உள்ளூர் முரடர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தால், அது விடுதலைப் புலிகளுக்கு உபயோகமாக இருக்கும்.***இயக்குனர் சிகரங்கள் சீமான், அமீர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டாம். தலைவர் கருணாநிதியே களத்தில் இறங்கிவிட்டார். இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிட்டனர் போலும்.விடுதலைப் புலிகளையோ அல்லது வேறு எந்த பிரிவினைச் சக்திகளையோ ஆதரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் குற்றம் அல்ல என்று கருதுபவன் நான். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள், காவல்துறையினர் ஆகியோர் அந்தக் கருத்தைக் கொண்டவர்கள் அல்லர்.இந்தக் கருத்தைப் பொதுக்கருத்தாக ஆக்காமல், அதற்கான விவாதங்களைச் செய்யாமல், ஏதோ ராமேஸ்வரத்தில் களம் கிடைத்துவிட்டது என்பதற்காக, சூழ்நிலையை முற்றிலும் புரிந்துகொள்ளாமல் பேசியுள்ளனர். இத்தனைக்கும் மேடையில் சிலர் அவர்களை எச்சரித்துள்ளனர். அதைப் புறந்தள்ளிவிட்டு இவர்கள் இப்படிப் பேசியுள்ளனர்.சீமான் இதுபோலப் பேசுபவர்தான். பருத்திவீரர் கொஞ்சம் அதிகமே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மேடை புதுசு அல்லவா.***இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருள்கள் அனுப்பவேண்டும் என்பதாகத் தமிழகப் போராட்டம் மாற்றப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் காசோலை எழுதித் தள்ளுகிறார்கள். இன்று செய்தித்தாள்களில் தமிழக அரசின் சார்பில் கால் பக்க விளம்பரங்கள் காணப்பட்டன.என்ன உதவிப் பொருள்கள்? யாருக்குப் போகும்? யார் எடுத்துக்கொண்டு போகப்போகிறார்கள்? யார் விநியோகிக்கப் போகிறார்கள்?இலங்கை அரசே இந்தப் பொருள்களை ‘திருடிக்கொள்ள’ வாய்ப்பு உள்ளது. எனக்கு இதில் சொந்த அனுபவம் உண்டு. சுனாமி நேரத்தில் மருந்துப் பொருள்களைச் சேகரித்து கொழும்பு TRO-வுக்கு அனுப்பினேன். ஸ்ரீலங்கன் விமானச் சேவை மூலம் அனுப்பப்பட்டது. போய்ச் சேர்வதற்குமுன்னரே கொழும்பில் இருந்த TRO பிரதிநிதி ஒருவருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பினேன். அவரால் கடைசிவரை அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவை எங்கே போயின என்றே தெரியாது. அரசே எடுத்துக்கொண்டிருக்கும் என்று அவர் தகவல் அனுப்பினார். அவ்வளவுதான்!மற்றொருபக்கம், விடுதலைப் புலிகள் அந்தப் பொருள்களைத் தங்களுக்கென எடுத்துக்கொண்டுவிடுவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.பொருள்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர என்ன வழிகள் மேற்கொள்ளப்படும் என்பதை தமிழக அரசும் இந்திய அரசும் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும். இல்லாவிட்டால், நிதி சேகரிப்பதில் தயக்கம் இருக்கும்.இந்திய அரசு வழியாக அனுப்பாமல், தமிழக அரசே நேரடியாக உதவிப் பொருள்களை ஈழப் பகுதிக்கு அனுப்பவேண்டும் என்கிறார் ராமதாஸ். இது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை.முதலில் இந்தச் செயலை ஒருங்கிணைக்கப்போவது யார்?ஆனால், அதற்குமுன், போரை நிறுத்தும் முயற்சிகளை எடுக்கவேண்டுமே? அதைப்பற்றி பிரணாப் முகர்ஜி ஒன்றுமே சொல்லவில்லையே? போர் தொடர்ந்தால், மக்கள் நிச்சயம் மேற்கொண்டு பாதிப்படைவார்கள். உதவிப் பொருள்களை அனுப்புவதால் பிரயோசனம் குறைவாகவே இருக்கும். வேண்டியவர்களுக்குப் போய்ச் சேராது.எனவே முதல் நோக்கம் போரை நிறுத்துவது.***தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும்?* வெளிப்படையாகப் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவது உபயோகமாக இருக்காது. அந்நிய நாட்டின் இறையாண்மையில் இந்தியா தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு வரும். போர் நிறுத்தத்தால் அதிகம் லாபமடைவது விடுதலைப் புலிகள்தான்; எனவே அதற்காகத்தான் போர் நிறுத்தம் முன்வைக்கப்படுகிறது என்று கூக்குரல் எழும்.(தி ஹிந்து இதை முன்னின்று நடத்த ஆரம்பித்துவிட்டது. தினம் தினம் ராஜபக்ஷ தி ஹிந்துவுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகளாகக் கொடுத்துத் தள்ளுகிறார். ராம் காலையில் எழுந்து, பல் தேய்த்த உடனேயே, நேரே கொழும்பு போய், ஒரு பேட்டி எடுத்துவிட்டு, மதியம்தான் மவுண்ட் ரோட் ஆஃபீஸுக்கு வருவார் போலிருக்கிறது!)* எனவே பின்னணியில் இதனைச் செய்யவேண்டும். இலங்கை அரசைப் போர் நிறுத்தத்தை நோக்கிச் செலுத்தவேண்டும். அதே நேரம், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகொண்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தவேண்டும்.* அட்டைக்கத்தி வீரர்களான வைகோ, அமீர் போன்றவர்கள், கையில் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்றெல்லாம் பேசுவதைத் தவிர்க்கவேண்டும். தேவை போரை நிறுத்துதல். மேலும் எண்ணெயை ஊற்றிப் பற்றவைப்பது அல்ல.* அதன்பின், அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி விடுதலைப் புலிகளைச் செலுத்துதல். இதுதான் கஷ்டமான பகுதி. விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முன்னேற்றத்தில் இருந்தபோதே, அதிகம் சலுகைகள் கிடைக்கவில்லை. இப்போது, நிச்சயம் கிடைக்காது. இருந்தாலும் முயற்சி செய்யவேண்டும்.* விடுதலைப் புலிகள், முகம் சுளிக்காமல், பிற தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒருமித்த கருத்தை எட்ட முனையவேண்டும். பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்பதைவிட, தமிழர் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.“இல்லை, அப்படியெல்லாம் நடக்காது. சிங்களர்கள் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையைத் தரமாட்டார்கள். தனி தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே, தமிழர் நலன் காக்கப்படும். அதுவும் ஆயுதம் ஏந்திப் போராடி, சிங்களர்களை வென்று, இலங்கையைப் பிளந்து, தமிழ் ஈழத்தை உருவாக்கியே தீர்வோம்.” என்பதுதான் விடுதலைப் புலிகளின் கருத்து என்றால், பிரச்னை இப்போது இருப்பது போலவே அல்லது இதைவிட மோசமாகத் தொடரும்.
எழுதியவர் திரு பத்ரி சேசாத்ரி
4 ஜன., 2009
3 ஜன., 2009
பெண்ணே உன்னால் ...
2 ஜன., 2009
அமைதி மலரட்டும் .

28 நவ., 2008
தேன்கூடு
தமிழ்மணம்
தமிழ்ப்பூ
இட்லி வடை
கல்வெட்டு
மருத்துவம்
கீத்துக்கொட்டாய்
முகமூடி
எண்ணங்கள்
கிரிக்கெட்
நிலவு நண்பன்
கண்ணோட்டம்
ஏகாந்தம்
மோகனின் தமிழ் அமுது
எண்ணங்கள்
மா.சிவக்குமார்
ஈ-தமிழ்
மகரந்தம்
தருமி
தமிழ் சசி
டுபுக்கு
முத்துவின் தமிழ்
லக்கி லுக்
பினாத்தல்கள்
செல்வன்
கடல் கணேசன்
காசு மழை
தமிழில் பங்குவணிகம்
இ-தேனீ
வல்லமை தாராயோ
சிந்தாநதி
ஜி போஸ்ட்
நுனிப்புல்
தினேஷின் பார்வை
விடுபட்டவை
ஜெயபாலின் கூடை
சுந்தரவடிவேல்
கேபிள் சங்கரின் பக்கங்கள்
அறிந்தும் அறியாமலும்
துளசிதளம்
சிறுவர் பூங்கா
தமிழில் மார்க்கெட்டிங்
சதுரங்கம்
தமிழ் குழந்தை
ஏதோ சொல்கிறேன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
நாம் - இந்திய மக்கள்
கதம்பம்
அண்ணாகண்ணன் வெளி
அண்ணாகண்ணன் கவிதைகள்
அண்ணாகண்ணன் புகைப்படங்கள்
அண்ணாகண்ணன் நேர்காணல்கள்
24 நவ., 2008
21 நவ., 2008
15 நவ., 2008
தமிழ்நாடு STDCODES
| City | Code |
| VANIYAMBADI | 4174 |
| VEDASANDUR | 4551 |
| VELLORE | 416 |
| VELUR | 4268 |
| VILATHIKULAM | 4638 |
| VILLUPURAM | 4146 |
| VIRUDHACHALAM | 4143 |
| VIRUDHUNAGAR | 4562 |
| WANDIWASH | 4183 |
| YERCAUD | 4281 |
தமிழ்நாடு STDCODES
| City | Code |
| SATHIYAMANGALAM | 4295 |
| SIVAGANGA | 4575 |
| SRIPERUMPUDUR | 44 |
| SRIVAIKUNDAM | 4630 |
| TENKASI | 4633 |
| THANJAVUR | 4362 |
| THENI | 4546 |
| THIRUMANGLAM | 4549 |
| THIRURAIPOONDI | 4369 |
| THURAIYURE | 4327 |
| TINDIVANAM | 4147 |
| TIRUCHENDUR | 4639 |
| TIRUCHENGODE | 4288 |
| TIRUNELVELLI | 462 |
| TIRUPATHUR | 4577 |
| TIRUPATTUR | 4179 |
| TIRUPUR | 421 |
| TIRUTTANI | 44 |
| TIRUVANNAMALAI | 4175 |
| TIRUVARUR | 4366 |
| TIRUVELLORE | 44 |
| TIRUVETTIPURAM | 4182 |
| TRICHY | 431 |
| TUTICORIN | 461 |
| UDUMALPET | 4252 |
| ULUNDURPET | 4149 |
| USILIAMPATTI | 4552 |
| UTHANGARAI | 4341 |
| VALAPADY | 4292 |
| VALLIYOOR | 4637 |
தமிழ்நாடு STDCODES
| City | Code |
| NAGARCOIL | 4652 |
| NAMAKKAL | 4286 |
| NANGUNERI | 4635 |
| NATHAM | 4544 |
| ODDANCHATRAM | 4553 |
| OMALPUR | 4290 |
| OOTACAMUND | 423 |
| ORATHANAD | 4372 |
| PALACODE | 4348 |
| PALANI | 4545 |
| PALLADUM | 4255 |
| PAPANASAM | 4374 |
| PARAMAKUDI | 4564 |
| PATTUKOTTAI | 4373 |
| PERAMBALUR | 4328 |
| PERUNDURAI | 4294 |
| POLLACHI | 4259 |
| POLUR | 4181 |
| PONDICHERRY | 413 |
| PONNAMARAVATHI | 4333 |
| PONNERI | 44 |
| PUDUKKOTTAI | 4322 |
| RAJAPALAYAM | 4563 |
| RAMANATHPURAM | 4567 |
| RAMESHWARAM | 4573 |
| RANIPET | 4172 |
| RASIPURAM | 4287 |
| SALEM | 427 |
| SANKAGIRI | 4283 |
| SANKARAN KOIL | 4636 |












